Kanitham Endraal Kadinamah?
கணிதப் பாடத்தில் மாணவர்களிடம் அதிகளவில் ஐயம் ஏற்படுவதை நாம் காண்கிறோம். இவ்வித சந்தேகங்களை அவ்வப்போது தீர்த்து கொண்டால் கணிதம் மீது தனி ஆர்வம் ஏற்பட்டுவிடும். இதன் அடிப்படையில் பள்ளி மாணவர்களின் கணித சந்தேகங்களை போக்கும் வகையில் தினமலர் பட்டம் மாணவர் பதிப்பு இதழில் கடந்த ஆறு மாதங்களாக வெளிவந்த கணித கேள்வி பதில்களின் தொகுப்பே இப்புத்தகத்தின் கருவாக அமைந்துள்ளது.
சிறு சிறு கணிதச் செய்திகள் மிகப் பெரிய உண்மைகளை உணர்த்தும் தன்மையுடையவையாக இருக்கின்றன. மாணவர்களின் கற்பனை திறனுக்கு எல்லையே இல்லை. அவ்வாறு யோசித்து வித்தியாசமான பரிமாணத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு முயன்ற அளவில் பதில் அளித்துள்ளோம். இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள நீங்கள் முயன்று படிக்க வேண்டும்.
இப்புத்தகத்தை வெளியிட அனுமதி அளித்த தினமலர் குழுவிற்கும் மற்ற நண்பர்களுக்கும் எங்கள் மன்றத்தின் பணிவான வணக்கங்களையும், நன்றிகளையும் உரித்தாக்குகிறோம். இப்புத்தகத்தை படிப்பதன் மூலம் மாணவர்களும், ஆசிரியர்களும் மிகுந்த பயனடைவார்கள் என்ற நம்பிக்கையில், பை கணித மன்றத்தின் பத்தாம் ஆண்டு விழாவில் இதை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.
Product Info | |
Language | Tamil |
ISBN | 9788193206522 |
Total Pages | 80 |
Released | 18th June 2017 |