Menu
Your Cart

காட்டுக்குள்ளே கணித மாயாவி

காட்டுக்குள்ளே கணித மாயாவி
  • Stock: In Stock
  • Reward Points: 3
  • Model: PMA014
  • Weight: 100.00g
  • Dimensions: 5.50in x 0.50in x 8.45in
  • ISBN: 9788194062806
₹60.00
Price in reward points: 60
தலையும் வாலும் புரியாத சமன்பாடுகள், கைமுறுக்குபோல் முறுக்கிப் பிழியப்பட்ட சூத்திரங்களின் குவியல்தான் கணிதப் பாடம் என்று குழம்பிப்போகிறவர்கள்தாம் நம்மில் பலர். அப்படிப்பட்டவர்களுக்குப் புதிர் போட்டிகள் நிறைந்த கதைகளின் வழியாகக் கணிதத்தை எளிமையாகச் சொல்லித் தருகிறது, ‘காட்டுக்குள்ளே கணித மாயாவி’ புத்தகம்.


பள்ளி விடுமுறை நாட்களில் தங்களுடைய செல்லப் பிராணிகளான மாடுகளை மலையடிவாரத்தில் மேய்க்கும்போது ஒரு மாயாவியிடம் சிக்கிப் பின்பு கணிதப் புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பதன் மூலமாக விடுபடும் நான்கு சிறுவர்களின் பயணக் கதையாக இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார் கணித ஆசிரியை இரா.செங்கோதை. கணித வளர்ச்சிக்காக சென்னையில் செயல்பட்டுவரும் ‘பை கணித மன்ற’த்தின் உறுப்பினர் இவர்.


வழக்கமான பாடப் புத்தகக் கணிதச் சிக்கல்களைப் போலன்றி, அன்றாட வாழ்வில் நாம் வாங்கும் பொருட்களின் உறையில் காணப்படும் UPC Bar Code-ல் உள்ள கணிதச் செய்தி, மேல்நிலைப் பள்ளித் தேர்வில் கணிதப் பாடத்தில் சராசரி மதிப்பெண் பெற்றிருந்தாலும் கணித மேதையாக இன்றுவரை போற்றப்படும் ராமானுஜன் குறித்த சுவாரசியமான உரையாடல், வாசகர்களைப் பங்கேற்பாளராக மாற்றும் புதிர்கள், கதையோட்டம் ஆகியவை மூலம் மாணவர்களின் கணித ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது இப்புத்தகம்.

Product Info
Language Tamil
ISBN 9788194062806
Total Pages 60
Released 22 April 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good