கவரும் கணிதக் கேள்விகள்






- Stock: In Stock
- Reward Points: 4
- Model: PMA033
- Weight: 100.00g
- Dimensions: 5.50in x 0.50in x 8.45in
- ISBN: 9788199183797
நமது வாழ்வில் எதிர்கொள்ளும் பல்வேறு நிகழ்வுகளுக்கு பின்னால் தகுந்த கணிதச் செய்திகள் ஒளிந்திருக்கின்றன. அவற்றின் ஆற்றலினாலேயே நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக அமைகின்றன. மனிதனின் அபரிதமான அறிவியல் முன்னேற்றத்திற்கு கணிதம் பெருந்துணையாக இருந்திருக்கிறது. இன்றைய நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் கணிதத்தின் பங்கு பெருமளவில் இருப்பதையும் பார்க்கிறோம். எக்காலத்திலும் அறிவியல் வளர்ச்சிக்கு கணிதம் நிச்சயம் தேவை என்பது தான் உண்மை. ஆனால் இவ்வளவு பெருமை பெற்றுள்ள கணிதத்தை மிகச் சரியாகவும், ஆழமாகவும் புரிந்து கொண்டுள்ளோமா? என கேட்டால் அது சந்தேகம் தான். அப்படி மாணவர்கள் மனதில் மலர்ந்த கணிதம் சார்ந்த சுவாரஸ்ய கேள்விகளுக்கான பதில்களை நூலாசிரியர் இப்புத்தகத்தில் வழங்கியுள்ளார். தினமலர் பட்டம் மாணவர் பதிப்பு நாளிதழில் ஒவ்வொரு வெள்ளியன்றும் வெளிவந்த கேள்வி பதில்களின் தொகுப்பாக இவை விளங்குகின்றன. இதேபோல் கணிதம் என்றால் கடினமா? மற்றும் பையன் பதில்கள் என்ற தலைப்புகளில் வெளிவந்திருக்கும் நூலகளையும் படிப்பது வாயிலாக உங்கள் மனதில் எழும் விதவிதமான கணிதச் சந்தேகங்களுக்கான விடைகளை தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு அறிந்து கொள்ளும்போது மாணவர்கள் மட்டுமல்லாது அனைவருக்கும் கணிதத்தின் மீது மிகுந்த ஆர்வமும், ஆச்சரியமும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.