Pie Mathematics Association releases it's newest edition of "எதிலும் கணிதம்-3"



இந்த புத்தகத்தின் பெயருக்கு ஏற்றார் போல் எதிலும் கணிதத்தை காண முடியும் என்பதை நூலாசிரியர் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். கணிதம் ஆழமாக தெரியாதவர்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக அமைந்துள்ளது இதன் சிறப்பு. நம் வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளில் கணிதம் எந்தளவு ஈடுபட்டுள்ளது என்பதை பத்து அத்தியாயங்களில் இப்புத்தகம் விளக்குகிறது. தரையோடுகளில் தென்படும் கணிதம் முதல் கொரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சமூக இடைவெளி சிந்தனை உட்பட பல அரிய தகவல்களை இப்புத்தகம் மூலம் அறிந்து மகிழலாம். இச்சிந்தனைகள் பல்வேறு சூழல்களில் கணிதத்தை நாமே ஒப்பிட்டு பார்க்கும் அளவிற்கு பயன்படும். நமது வாழ்வில் கணிதம் எங்கெல்லாம் பயன்படும் என கேட்போருக்கு எதிலும் கணிதம் என்கிற தலைப்பில் வெளிவந்துள்ள முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் தொகுப்பு புத்தகங்கள் பெருந்துணை புரியம்.