Menu
Your Cart

பெண் கணித மேதைகள்

பெண் கணித மேதைகள்
  • Stock: In Stock
  • Reward Points: 5
  • Model: PMA018
  • Weight: 100.00g
  • Dimensions: 5.50in x 0.50in x 8.45in
  • ISBN: 9788191088489
₹100.00
Price in reward points: 100

"பெண் கணித மேதைகள்" என்கிற புத்தகத்தை பை கணித மன்றம், "உலக பை தினம் 2020" அன்று வெளியிடுவதில் பெரு மகிழ்வடைகிறது. இந்நூல் பை கணித மன்றத்தின் பனிரெண்டாம் புத்தகமாகும். இதுவரை வெளியிட்ட புத்தகங்களுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள், அறிவியல் ஆர்வலர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது எங்கள் மன்றத்திற்கு உற்சாகத்தையும் நிறைவையும் அளிக்கிறது.

பொது யுகம் 370 ல் துவங்கி தற்காலம் வரையில் கிட்டத்தட்ட 1600 ஆண்டு காலத்தில் சாதித்த பதிமூன்று பெண்களின் வாழ்வையும், அவர்களின் பங்களிப்புகளையும் நூலாசிரியர் செல்வி இரா. செங்கோதை திறம்பட விளக்கியுள்ளார். இந்நூல் நூலாசிரியரின் இரண்டாம் படைப்பாகும்.  சோதனையில்லாமல் சாதனையில்லை என்ற உட்கருத்தை இப்புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் காணலாம். இப்படி அரும்பாடுபட்டு உலகை பிரமிக்க செய்த இந்த பதிமூன்று பெண் கணித அறிஞர்களில் இப்புத்தகம் வெளியிடும் தருவாயில் மூவர் நம்மிடையே வாழ்ந்து கொண்டுள்ளனர்.

வாழ்வில் சாதிக்க துடிக்கும் அனைத்து பெண்களுக்கும் இப்புத்தகம் பெரும் உந்துதுதலை ஏற்படுத்துவது மட்டுமால்லாமல் சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கும் என நம்புகிறோம். இன்னல்களை கடந்து வெற்றியடைய துடிக்கும் அனைத்து பெண்களுக்கும் இப்புத்தகத்தை பை கணித மன்றம் காணிக்கையாக்குகிறது. இந்நூலை இயற்றிய செல்வி. இரா. செங்கோதை மென்மேலும் பல படைப்புகளை உருவாக்கி கணிதத்திற்கு பெரும் பங்களித்து பெரு வாழ்வு பெற்று வாழ பை கணித மன்றம் வாழ்த்துகிறது.  

Product Info
Language Tamil
ISBN 9788191088489
Total Pages 80
Released 14 March 2020

Write a review

Note: HTML is not translated!
Bad Good